குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவ் கைது
பண்ருட்டி: பண்ருட்டியில் பச்சிளம் குழந்தையை விற்ற வழக்கில் புதுச்சேரி ஆசாமியை போலீசார் இன்று (அக்.,31) கைது செய்தனர்.
பண்ருட்டி, ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் அப்துல்லா,31; இவரது மனைவி பாத்திமா,26; நிறைமாத கர்ப்பணியாக இருந்த பாத்திமாவிற்கு, கடந்த 19ம் தேதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே தனக்கு ஒரு மகள் உள்ள நிலையில், பிறந்த ஆண் குழந்தையை, பண்ருட்டி அன்வர்ஷா நகரை சேர்ந்த ஜாபர்கான்,44; என்பவர் மூலம், திருச்சியை சேர்ந்த தம்பதிக்கு ரூ.4.5 லட்சத்திற்கு விற்றார்.
இதுகுறித்து குழந்தை நலகாப்பக திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ராவதி அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, குழந்தையை விற்க உதவிய ஜாபர்கானை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், குழந்தையை விற்க புரோக்கராக செயல்பட்ட புதுச்சேரி, சண்முகாபுரம் அணைக்கரை வீதியை சேர்ந்த முபாரக்கான் (எ) சுலைமான்,52; என்பவரை இன்று கைது செய்தனர்.
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி