40 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது ரூ.1.25 லட்சம், கார் பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 40 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநில வாலிபர்கள் இருவரை கைது செய்தனர்.

விருத்தாசலம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சந்துரு, சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு அடங்கிய தனிப்படை போலீசார் இன்று (அக்.,31) மாலை 4:00 மணியளவில், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சென்னையில் இருந்து ஜெயங்கொண்டம் மார்க்கமாக சென்ற ஹூண்டாய் சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், 3 சாக்கு மூட்டைகளில் 40 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், ரூ.1.25 லட்சம் ரொக்கம் இருப்பது தெரிந்தது. மேலும், அவர்கள், ராஜஸ்தான் மாநிலம், ஜாலாராம் மகன் திலீப் சிங், 35, கண்டிலால் மகன் சர்வன்சிங், 30, என்பது தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 40 கிலோ குட்கா, 1.25 லட்சம் ரொக்கம், சொகுசு கார் மற்றும் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement