இன்று குரூப்-2, 2ஏ தேர்வு 14,199 தேர்வர்கள் தயார்

நாமக்கல்:டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான, முதல்நிலை தேர்வு, இன்று மாநிலம் முழுவதும் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு ஆகிய தாலுகாவில், 50 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை, 9:30 முதல், மதியம், 12:30 மணி வரை நடக்கும் இத்தேர்வில், மாவட்டம் முழுவதும், 14,199 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், இத்தேர்வு சிறப்பாக நடப்பதற்காக, துணை கலெக்டர் நிலையில், நான்கு -பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களுக்கு எளிதாக வந்து செல்லும் வகையில், பஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், தேர்வர்கள் அமர்ந்து தேர்வு எழுதுவதற்காக, அவர்களின் பதிவு எண் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement