கோழிப்பண்ணையில் தவறி விழுந்தவர் பலி

எலச்சிபாளையம்:ராசிபுரம் தாலுகா, குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் நந்தகுமார், 28; வெல்டிங் தொழிலாளி.

இவர், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, எலச்சிபாளையம் அருகே, கோக்கலை கிராமத்தில் உள்ள யுவராஜ் என்பவரது கோழிப்பண்ணையில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென தவறி கீழே விழுந்தார்.இதில், நந்தகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நந்தகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement