சமச்சீர் உரமிடுதல்: விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
மோகனுார்:மோகனுார்
தாலுகாவில், 'அட்மா' திட்டம் சார்பில், விவசாயிகளுக்கு சமச்சீர்
உரமிடுதல் குறித்த பயிற்சி முகாம், வளையப்பட்டியில் நடந்தது.
வட்டார
வேளாண் உதவி இயக்குனர் ஹேமலதா தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.
அதில், கரூர் அரசு வேளாண் கல்லுாரி மாணவியர் உமா, மவுலீஸ்வரி, ரிபாயா,
ஸ்வேதா, மதுபிரிதிகா, வசந்தி, ரோகிணி, ஷமிந்திரா ஆகியோர்
பங்கேற்றனர்.
பயிற்சியின் ஒரு பகுதியாக, மாணவி ஸ்வேதா, சமச்சீர்
உரமிடுதலின் முக்கியத்துவம் குறித்தும், பயிர்களின் சீரான வளர்ச்சி,
மண்ணின் வளத்தை பாதுகாத்தல், உரச் செலவை குறைத்தல், மண்ணில் உள்ள
ஊட்டச்சத்துக்களை சரியான அளவில் பயிர்களுக்கு வழங்குதல்
போன்றவற்றில், சமச்சீர் உரமிடுவதன் அவசியம் குறித்து விளக்கினார்.
மேலும்,
மண்ணின் தன்மை, பயிரின் தேவைக்கேற்ப தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்
சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை, சரியான விகிதத்தில்
பயன்படுத்துவதன் மூலம், அதிக மகசூல் பெற முடியும் என்பதை விளக்கினர்.
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி