மாநகராட்சியில் ரூ.211.83 கோடியில் பாதாள சாக்கடை: கமிஷனர் ஆய்வு
நாமக்கல்:நாமக்கல்
மாநகராட்சியில், உலக வங்கி மூலம் செயல்படுத்தப்படும், தமிழ்நாடு
காலநிலை தாங்கும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 211.83 கோடி
ரூபாய் மதிப்பில், புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இத்திட்ட பணிகளில் ஒப்பந்ததாரர் மூலம், பீஹார்,
ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 150
தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,
நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி, வடமாநில தொழிலாளர்கள்
தங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, தங்குமிட வசதி,
கழிப்பறை மற்றும் சுகாதார வசதி குறித்து ஆய்வு செய்தார். அப்போது,
தொழிலாளர்கள் பாதுகாப்பு வழிமுறை, காப்பீட்டு திட்டங்கள்,
உறுதியளிக்கப்பட்ட வாழ்வாதாரம் வழங்கப்படுவது குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, பாதாள சாக்கடை
திட்டத்திற்கான பொருட்கள் சேமிப்பு வளாகத்தை, கமிஷனர் நேரில் ஆய்வு
செய்து, திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கட்டுமான
பொருட்களின் தரத்தை உரிய முறையில் பரிசோதித்து, நிர்ணயிக்கப்பட்ட
தரநிலைகளுக்கு இணங்க இருப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
'புதிதாக அமைக்கப்பட்டு
வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடர்பான புகார்களை, பொதுமக்கள்
தெரிவிக்க விரும்பினால், 99442-14905 என்ற மொபைல் எண்ணில், 'வாட்ஸாப்'
மூலம் தெரிவிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி