சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டி சந்தையூரில், சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது.

இந்த சந்தையில், காலையில் ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது. தற்போது, தீபாவளி பண்டிகையையொட்டி, ஆடு, கோழி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.இதில், 8 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 8,500 ரூபாய், நாட்டுக்கோழி, ஒரு கிலோ, 480 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

குளித்தலை, சத்தியமங்களம், அய்யர்மலை, லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, தோகைமலை பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், ஆடு, கோழிகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

Advertisement