காசியாபாத்தில் அதிரடி நடவடிக்கை; தமிழகத்தில் இப்படி சட்ட விரோத கட்டடங்கள் இடிக்கப்படுமா?

13

-நமது சிறப்பு நிருபர்-

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோகன் நகர் பகுதியில் குடியிருப்பு கட்டடங்கள் உள்ளன. இங்கு சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட இரண்டு 10 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்க அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எட்டு மாடிகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் 10 மாடிகளை கட்டுமான நிறுவனம் கட்டி உள்ளது.

பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்திலும், பொதுப் பயன்பாட்டு இடங்களையும் ஆக்கிரமித்து விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. பொதுப் பயன்பாட்டுப் பகுதிகளை வீட்டுமனைகளாக மாற்றியமைத்து ஏமாற்றப்பட்ட 85 தரைத்தள குடியிருப்பாளர்களுக்கு, அவர்கள் செலுத்திய தொகை மற்றும் கட்டுமானச் செலவை 10 சதவீத வட்டியுடன் பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும். விதிகளை மீறிய கட்டுமான நிறுவனத்திற்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்காக அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி சட்டவிரோத கட்டடங்களை இடிக்க 2 மாதம் கெடு நிர்ணயித்துள்ளனர். கட்டுமான நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து சட்டவிரோத வரைபடத்திற்கு ஒப்புதல் அளித்த காசியாபாத் மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் மூத்த அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

@block_Y@

அடுத்து என்ன நடக்கும்?



நீதிமன்ற உத்தரவுப்படி,

* இரண்டு வாரங்களுக்குள் பிரண்ட்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் எனும் கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.

* ஒரு மாதத்திற்குள், உத்தரப் பிரதேச அரசு, காசியாபாத் மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் துணை தலைவர் அதுல் வத்ஸ் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை துவங்க வேண்டும்.

* இரண்டு மாதத்திற்குள் சட்டவிரோத இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளையும், மற்ற நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளில், அனுமதியை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும். குடியிருப்பாளர்களுக்கு 10% வட்டியுடன் பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும். block_Y

@block_P@

தமிழகத்தில் இப்படி நடக்குமா?



தமிழகம் முழுவதும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் விதிகளை மீறி கட்டப்பட்டு இருக்கின்றன. நீர்நிலைகளிலும், அரசுக்கும் சொந்தமான நிலங்களிலும், மக்கள் பயன்பாட்டுக்கான பொது இடங்களையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை கண்டறிந்து, காசியாபாத்தில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை போல் தமிழகத்தில் இப்படி சட்ட விரோத கட்டடங்கள் இடிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.block_P

Advertisement