மாநிலத்தின் பெருமைகளை நிலைநிறுத்த உறுதியேற்போம்; முதல்வர் விஜய்

16

சென்னை: ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

@block_P@

நன்றி செலுத்துவோம்!



திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று நாம் காணும் தமிழகத்தின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். "மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்" என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.

எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர். எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021ம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம். தமிழ் நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.block_P

@block_B@

உறுதியேற்போம்!



வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், ''தொன்மையும், தனித்துவமும், வரலாற்றுப் பெருமையும் கொண்ட நமது தாய்த்தமிழ் மொழியை அடையாளமாகக் கொண்டு, நமது மாநிலம் உருவான இந்த நன்னாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ் மொழி, இலக்கியம், கலை, கட்டடக்கலை, வீரம், விருந்தோம்பல் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்திருப்பது நமது தமிழகம். இந்த மண்ணின் பெருமையையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். கல்வி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் உயர வேண்டும். நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்து, வளர்ச்சியிலும் முன்னேறி, வளமான தமிழகத்தை உருவாக்க, இந்த தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.block_B

@block_G@

வீரத்திலும், அறிவிலும்!



அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையும், சங்க இலக்கியங்களின் செழுமையும், தமிழர் பண்பாட்டின் பெருமையும் போற்றிப் பாதுகாக்கும் பெருநிலமாம் நம் மாநிலம் நமக்கு அமைந்திட்ட வரலாற்று நாள் இன்று. நவம்பர் 1ம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான அதிமுக அரசு என்ற பெருமிதத்துடன், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். வீரத்திலும், அறிவிலும், கலை பண்பாட்டிலும், சமூக, கல்வி தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தாய்த்தமிழ்நாடு, அனைத்துத் துறைகளிலும் மேலும் பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ்ந்திட, தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளாம் நாம் அனைவரும் ஓரணியாய் நின்று உழைப்போமென இந்நன்னாளில் உறுதியேற்போம். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
block_G

Advertisement