விவசாயி வீட்டில் கொள்ளை; இலங்கை தமிழர் கைது
சேவூர்: கடந்த 15ம் தேதி சாவக்கட்டுப்பாளையம் அருகே சுள்ளிப்பாளையம், பொன்னியங்காட்டில் வசிக்கும் சிவசாமி என்பவரது வீட்டில், முகமூடி அணிந்த கொள்ளையர், மற்றும் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி, 7 சவரன் நகை, ரொக்கம் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக, சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், புளியம்பட்டி ரோட்டில் ரவுண்டானா பகுதியில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், அவ்வழியாக வந்தவரிடம் விசாரித்தனர்.
அதில், அவர் அவிநாசி, காசிகவுண்டம்புதுாரில் வசிக்கும், இலங்கை தமிழரான தர்மகுமார் 45, என்பது தெரியவந்தது.அவர் சுள்ளிப்பாளையத் தில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரிந்து கைதுசெய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் துறைக்கு நற்செய்தி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
-
ரூ.634 கோடி லஞ்ச வழக்கை எதிர்த்து நேருவின் மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட் குட்டு
-
ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு; மகேஷூக்கு 3 நாள் போலீஸ் காவல்
-
சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
-
உடல் நிலை பாதித்தவர் சாவு
-
தவெக ஆட்சியில் தமிழகம் பேரழிவை சந்திக்கும்; சொல்கிறார் ஸ்டாலின்
Advertisement
Advertisement