கழிப்பறை வசதி இல்லாத அரசு பள்ளி கிராம சபையில் ஆசிரியர்கள் ஆதங்கம்
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி ஊராட்சியில், கிராமசபை கூட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்மோன் தலைமை வகித்தார்.
அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் பேசுகையில், ‘‘பள்ளி துவங்கி 40 ஆண்டுகள் கடந்தும், மாணவர்களுக்கு கழிவறை வசதி இல்லாததால், பள்ளி வளாகத்தை ஒட்டிய வனப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற நேரங்களில் வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. குடிநீர் வசதி இல்லாததால், சில நேரங்களில் சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் நிலை உள்ளதால் பள்ளிக்கு சொந்தமாக குடிநீர் கிணறு அமைத்து தர வேண்டும்.’’
கழிவுநீர் கால்வாய் வசதி, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர பொதுமக்கள் வலியுறுத்தி பேசினார்கள். கூட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு