இந்த நன்னாள் வெற்றியை வாரி வழங்கட்டும்: தமிழில் பிரதமர் மோடி தமிழ்நாடு நாள் வாழ்த்து

16

சென்னை: தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழக மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.

தமிழக மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாசாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது. இந்த நன்னாள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்'' என குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு வீடியோ!

தமிழ்நாடு நாள்: பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது என்ன?

வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!

Advertisement