சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது; கல்யாண்ராமன் பேச்சு

சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் ஆன்மிகப் பேச்சாளர் திருச்சி கல்யாண்ராமன் பேசினார்.

மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் கலைமாமணி திருச்சி கல்யாணராமனின் வாமன அவதாரம் என்ற தலைப்பிலானஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருமோகூர்கோபால் பட்டர் தலைமை தாங்கினார். தமிழக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருச்சி கல்யாணராமனுக்கு ஆஸ்திக சேவா ரத்னா என்ற விருதினை வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு மதுரை மாவட்ட முன்னாள் சேர்மன் இளங்கோவன் சத்குரு சங்கீத சமாஜம் மேனேஜர் சந்துரு உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்வில் திருச்சி கல்யாணராமன் வாமன அவதாரம் என்ற தலைப்பில் பேசியதாவது;

வாழ்க்கையில் நம்பிக்கை இருந்தால்தான் ஜெயிக்க முடியும்.பொது காரியம் செய்யும்போது இடையூறு வரும். அதைப்பற்றி நாம் கவலைப்பட கூடாது.ராமா ராமா ராமா என மூன்று முறை கூப்பிட்டால் ஸ்ரீராமன் ஓடி வருவான். ரெங்க சகோதரி என கூப்பிட்டால் மீனாட்சி ஓடி வருவாள் .

சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்றவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள் .
சனாதனம் என்றால் அழியாதது என்று பொருள். அத்தி வரதா கஜேந்திர வரதா என்று கூப்பிட்டால் நம்மை காப்பாற்ற பகவான் ஓடோடி வருவான். சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்

Advertisement