பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்; முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களும், போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் நிலை குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில், போக்சோ வழக்குகளின் விவரம், தற்போதைய நிலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென கூடுதலாக தேவைப்படும் நீதிமன்றங்கள் ஆகியவை குறித்து முதல்வர் விஜய் விரிவாக கேட்டறிந்தார்.
46.59 கோடி ரூபாயில்...
இவ்வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தி, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். ஏற்கெனவே பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக, 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் ரூபாய் 46.59 கோடி செலவில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் இலக்குடன், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் ஆகிய 3 இடங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றமும் என மொத்தம் 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கப்பட உள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கும், நீதித்துறை நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் அரசின் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரத்யேக வீடியோ!
ரூ. 46.59 கோடியில் 26 புதிய நீதிமன்றங்கள்: முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே ஒரு கிளிக்!
வாசகர் கருத்து (7)
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
01 நவ,2026 - 15:15 Report Abuse
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்வது சமூக விரோதிகள் மற்றும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள். அவர்களை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்று கொடுப்பது ஒருபக்கமிருக்கட்டும. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுப்பது அதைவிட சுலபம். வாய் மொழி உத்தரவை விட லஞ்சம் வாங்கி பிடிபட்டால் ஒராண்டு ஜெயில் என்று ஒரு G.O போட்டால் போதும். மாற்றம் வரும். 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
01 நவ,2026 - 14:04 Report Abuse
சிறு பெண் குழந்தைகள் காணாமல் போகுது... இது தினசரி செய்தி ஆகி விட்டது... இதற்கு காரணம் கஞ்சா போதை.. விலைவாசி மின் கட்டணம் விண்ணை முட்டுது... இப்படி கேவல லாட்டரி ஆட்சிக்கு சினிமா பார்த்து வோட்டு போட்ட அற்ப பதர்கள்... 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
01 நவ,2026 - 14:04 Report Abuse
அரியலூரில் போதை ஆசாமிகளால் தாக்குதலுக்கு உள்ளான ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு... இது இன்றைய செய்தி... ரோட்டில் குடித்து விட்டு போதையில் அக்கிரமம் செய்யும் ஆசாமிகளை யாரும் கேள்வி கூட கேட்க முடியாது... தினம் தினம் சிறு பெண் குழந்தைகள் காணாமல் போகுது... போதையில் பெற்ற தாயை அடித்து கொன்ற மகன்.. இப்படி நாடு சீரழியுது... இதை கவனிக்க துப்பில்லை... சிங்க பெண் படை யாரவது பார்த்தது உண்டா... இப்போது சிறப்பு நீதி மன்றமாம்.. 0
0
Reply
GMM - KA,இந்தியா
01 நவ,2026 - 13:35 Report Abuse
பெண்கள் செய்யும் குற்றங்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள். இதில் வழக்கறிஞர் பங்கு கூடாது. ஊர் பஞ்சாயத்து போல் நேரடி விசாரணை. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
01 நவ,2026 - 13:30 Report Abuse
கட்சியிலேயே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்ய ஆளு இருக்கே குமாரு....அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 0
0
Reply
V Venkatachalam, Chennai- 87 - ,
01 நவ,2026 - 13:24 Report Abuse
இத்தனை நீதி மன்றங்கள் திறக்க தேவையில்லை. ஆனா ஒரு விஷயத்தை கண்டிப்பா செய்யணும். திருட்டு தீயமுக காரனுங்களை வேரோடு வெட்டி சாய்க்கணும். புற்றீசல் மாதிரி இப்போது கிளம்பும் பிரச்சினைகள் அத்தனைக்கும் அவர்களே காரணம். 0
0
Reply
VSMani - ,இந்தியா
01 நவ,2026 - 12:43 Report Abuse
எத்தனை புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தாலும் வாய்தா வாய்தா என்று வாய்தா போடும் நீதிபதிகள் இருக்கும் வரை விரைவில் நீதி கிடைக்காது. 0
0
Reply
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement