திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-நமது சிறப்பு நிருபர்-
வங்கக்கடலில் 'முரசு' புயல் உருவானது; தென்மேற்கு, மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் நவம்பர் 3ம் தேதி அதிகாலை நேரத்தில் நெல்லூர் மற்றும் நர்சபூர் இடையே உள்ள கடற்கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இன்று (நவம்பர் 01) திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்
* ராணிப்பேட்டை
* சென்னை
நாளை (நவம்பர் 02) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
நாளை (நவம்பர் 02) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* வேலூர்
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
நாளை மறுநாள் (நவம்பர் 03) நீலகிரி மாவட்டத்தில் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி