கூடலுார் வழியாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு! குற்ற புலனாய்வு அலுவலகம் திறக்கப்படுமா?
கூடலூர்: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, கூடலூரில் மீண்டும் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தை திறக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூரிலிருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலை கண்காணித்து தடுக்க கூடலூர், தமிழக - கேரளா எல்லையான நாடுகாணியில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன், இந்த அலுவலகம் திடீரென மூடப்பட்டு ஊட்டி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. கண்காணிப்பு தொய்வால் வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்தது. அவ்வப்போது வருவாய் துறையினர் ஆய்வு செய்து, கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வந்தனர்.
கடந்த மாதம் கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் நடேஷன் தலைமையில் ஊழியர்கள் கூடலூர் பஸ் ஸ்டாண்டில் ஆய்வில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு பஸ்சிலிருந்தும், 1 டன், பஸ் ஸ்டாண்டில் இருந்தும், 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். கூடலுார், பந்தலுார் எல்லை பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவது வருவாய் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. ரேஷன் அரிசி கடத்தலை கண்காணித்து தடுக்க, தமிழக அரசு கூடலூரில் மீண்டும் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தை திறக்க வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி