மயான எரியூட்டும் கட்டடம் சேதம்: சீரமைக்க கோரிக்கை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தில் மயானத்தில் உள்ள எரியூட்டும் கட்டடம் சேதமடைந்துள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலச்சாக்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு கடந்த பலஆண்டுகளுக்கு முன்பு மயானத்திற்கு எரியூட்டும் கட்டடம் கட்டப்பட்டது.பின்பு முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் சேதம் அடைந்திருந்தது. இந்நிலையில் கட்டடம் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு மக்கள் சிரமப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து எரியூட்டும் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026
Advertisement
Advertisement