குரூப் 2 தேர்வில் 5350 பேர் ‘ஆப்சென்ட்’
மதுரை: மதுரையில் நடந்த தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 2 தேர்வில் 5350 பேர் ‘ஆப்சென்ட்’ ஆகி இருந்தனர்.
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அலுவலர் உட்பட குரூப் 2 மற்றும் சங்கங்களின் மேற்பார்வையாளர் உட்பட குரூப் 2 ஏ., பதவிகளுக்கு என 846 பணியிடங்களுக்கான காலியிடங்களில் பணிநியமன அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டு இருந்தது. இதில் விண்ணப்பித்தோருக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.
மதுரையில் இத்தேர்வுக்கு 26 ஆயிரத்து 658 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு கிழக்கு தாலுகாவில் 8 மையங்கள், வடக்கில் 30, தெற்கு தாலுகாவில் 29, மேற்கில் 8, மேலுாரில் 6, உசிலம்பட்டியில் 9 மையங்கள் என மொத்தம் 90 தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டன.
மையத்திற்கு காலை 9:00 மணிக்கு மேல் வந்தோருக்கு அனுமதி மறுத்தனர். தேர்வர்களுக்கு எலக்ட்ரானிக் பொருள், டிஜிட்டல் கைக்கடிகாரம் கொண்டு செல்ல அனுமதியில்லை. இத்தேர்வில் நேற்று 21 ஆயிரத்து 298 பேர் பங்கேற்றனர். 5350 பேர் ( 20 சதவீதம் ) ‘ஆப்சென்ட் ஆகி இருந்தனர். மையங்களுக்கு குடிநீர், சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி தேர்வு மையத்தில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார். தேர்வர்களிடம் அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார்.
மேலும்
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு