மகள் கர்ப்பம் தந்தை கைது

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வெள்ளையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் முதல் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் முதல் கணவரைப் பிரிந்த இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார். பின்னர் வள்ளியூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அப்பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 13 வயது மகள் உள்ளார். பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அச்சிறுமியை அந்த நபர் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

வள்ளியூர் மகளிர் போலீசார் போக்சோவில் அவரை கைது செய்தனர்.

Advertisement