அன்னதான விழா

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புனர் பூச தினத்தை முன்னிட்டு அன்னதான விழா நடந்தது.

திருவண்ணாமலை ஆரிய வைசிய சமாஜ தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் மோகன், செயற்குழு உறுப்பினர்கள் தயானந்தன், ரமேஷ்பாபு முன்னிலை வகித்தனர். முன்னதாக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement