கிராம சபைக் கூட்டம்

வேப்பூர்: உள்ளாட்சி தினத்தையொட்டி, ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது.

நல்லுார் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, பி.டி.ஓ., கொளஞ்சி தலைமை தாங்கினார். நிர்வாக மேலாளர் சபிவுல்லா, ஊராட்சி செயலர் திருநீலமணிகண்டன், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

சேப்பாக்கத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி செயலர் சரவணன் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் தினேஷ், தனி அலுவலர் பாக்கியலட்சுமி, மகளிர் சுயஉதவிக் குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், ஊராட்சிகளின் வரவு செலவுகள், 'தமிழ்நாடு வெற்றி' திட்டப்பணிகள் கணக்கெடுப்பு உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement