பொள்ளாச்சி, வால்பாறையில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது.

ஆர்.எஸ்.எஸ்., (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) கேந்திரம் சார்பில், விஜயதசமியை முன்னிட்டு பொள்ளாச்சி, தெப்பக்குளம் வீதி முதல் கே.கே.ஜி., மண்டபம் வரை, 3 கிலோ மீட்டர் தூரம் அணிவகுப்பு பேரணி நடந்தது. இதில், 170 பேர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி வாழும் கலை முதுநிலை ஆசிரியர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார்.

ஆனந்த் ரகுநாதன் பேசினார். மேலும், இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

வால்பாறை





வால்பாறை நகரில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில், விஜயதசமியை முன்னிட்டு, பேரணி நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முன்பு துவங்கிய அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்றனர்.

அதன் பின் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, வால்பாறையை சேர்ந்த தொழில் அதிபர்கள் சிங்காரம், கிருஷ்ணாஷ்சுதீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்த தயானந்த், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement