மக்கள் கல்வி நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம்: மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய மதுரை மண்டலம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சார்பில் சேவா சங்கல்ப் கதர் மகோத்சவ்– 2026 மக்கள் கல்வி நிகழ்ச்சி நடந்தது.

மாநில அளவில் கல்லுாரிகளுக்கு 'தேசத்திற்கு கதர், மாற்றத்திற்கு கதர் என்ற கட்டுரைப் போட்டி, 'தற்சார்பு பொருளாதாரமும் கிராமிய நெசவின் மறுமலர்ச்சியும்' என்ற பேச்சுப் போட்டி நடந்தது.

கல்லுாரி முதல்வர் அசோக் குமார் தலைமை வகித்தார். கதர், கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குநர் கணேசன் வரவேற்றார். மாவட்ட தொழில் மைய மணிகண்டன், கதர்,கிராமத் தொழில் ஆணைய உதவி இயக்குநர் செந்தில்குமார், மதுரை விற்பனை மேம்பாட்டு மேலாளர் ராம்போ குமார், கள்ளிக்குடி நிறுவன இயக்குநர் தமிழ்ச்செல்வி பேசினர். கல்லுாரி பேராசிரியர் பாபு நன்றி கூறினார்.

Advertisement