சாராய வியாபாரி கைதுக்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு கஞ்சா வழக்கு பதிந்து விடுவித்த காவல்துறை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த ஒருவர், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கடந்த, 30ல் விபத்தில் சிக்கி, உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார். மருத்துவ பரிசோதனையில், அவர் சாராயம் குடித்திருந்தது தெரிய வரவே, பெருந்துறை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த நோயாளி என்பதால், மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் சென்றது.
விசாரணையில் அவல்பூந்துறையை சேர்ந்த ஆறுமுகம், 54, என, சாராய வியாபாரியின் பெயரையும் சேர்த்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மொடக்குறிச்சி போலீசார், ஆறுமுகம் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். சாராயம் காய்ச்சியது தொடர்பான அறிகுறிகள் இல்லை. ஆனாலும் அவர் சாராய வியாபாரிதான் என்பது உறுதியானது.
இந்நிலையில் மொடக்குறிச்சியை சேர்ந்த ஆளுங்கட்சி தரப்பினர், அவரை சாராய வழக்கில் கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர். அத்தோடு நில்லாமல் உடனடியாக அவரை ஜாமினிலும் விடுவித்தனர்.
/விடுவிப்பால் சர்ச்சை/
கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் எவரும் உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்படுவதில்லை. ஆனால் சாராய வியாபாரி மீது ஆறுமுகம் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை சில மணி நேரத்தில், மொடக்குறிச்சி போலீசார் விடுவித்ததும், மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு