மது பாட்டில் கடத்திய நபர் கைது
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே மது பாட்டில் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட பொன்பரப்பி இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் உலகளப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த நபர் 146 டாஸ்மாக் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கன்னியைச் சேர்ந்த இருதயராஜ், 42; என தெரியவந்தது. உடன் அவர் மீதுவழக்குப் பதிந்து கைது செய்து, 146 மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
-
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல்
-
புயலால் 2வது நாளாக இன்றும் பாதிப்பு; சென்னை-ஆந்திரா செல்லும் 4 விமானங்கள் ரத்து
-
இன்றும் உயர்ந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு
Advertisement
Advertisement