இந்தியாவை சுற்றி வர ரூ.10 ஆயிரம் போதுமா?

2

புல்லாங்குழல் இசைத்த மகன்; புன்னகையில் சொன்னார் தாய்



ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜூன் முண்டா. அவரது வயது முதிர்ந்த தாய் சாய்ரா முண்டா உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஜாம்ஷெட்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாய் படுக்கை அருகே அமர்ந்த அர்ஜூன் முண்டா, புல்லாங்குழல் வாசிக்கிறார். அதை ரசித்து புன்னகைத்த தாய், கை உயர்த்தி ஆசி வழங்கும் வீடியோ, இணையத்தில் வேகமாக பரவுகிறது.
Latest Tamil News
வீடியோவை வெளியிட்ட அர்ஜூன் முண்டா, 'இன்று என் தாயுடன் விலைமதிப்பற்ற, உணர்வுபூர்வமான தருணங்களைக் கழித்தேன். என் தாய் தான் என் வாழ்க்கையில் மிக உயர்ந்த வரம். அவருடைய அன்பே எனது மிகப்பெரிய பலம்,' என்று பதிவிட்டுள்ளார்.

கோவா குடிபெயர்ந்த தம்பதி; செலவுக்கணக்கு விபரம் வைரல்



எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும் பரபரப்பு மிகுந்த பெங்களூருவில் இருந்து அமைதியான கோவாவுக்கு குடிபெயர முடிவு செய்தனர், ராதிகா - எகனேஷ் தம்பதி. ஓராண்டாக திட்டமிட்டு எல்லாவற்றையும் செய்தனர். வீட்டுப் பொருட்களை பேக்கிங் செய்வது, வாகனங்களில் கொண்டு செல்வது, பயணச் செலவு, புது வீடு கிடைக்கும் வரையிலான தங்குமிடச் செலவு எல்லாம் சேர்த்து, 75 ஆயிரம் ரூபாய் ஆனது. அவர்களது செலவுக்கணக்கு விபரம், இன்ஸ்டாகிராமில் கவனம் பெற்றது.
Latest Tamil News
'5 நாள் கோவா சுற்றுப்பயணம் செல்வதற்கே, 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை பலரும் செலவழிக்கின்றனர். அப்படி இருக்கையில், மொத்தமாக கோவா குடி பெயர்வதற்கு 75 ஆயிரம் ரூபாய் என்பது சரியான தொகை தான்' என்கிறார், ராதிகா.

இந்தியாவை சுற்றி வர ரூ.10 ஆயிரம் போதுமா?



வெறும் 10 ஆயிரம் ரூபாயில் இந்தியாவை சுற்றி வர முடியுமா? நம்பிக்கையுடன் புறப்பட்டு விட்டார், இளம்பெண் ஒருவர். 'இது உங்களுக்கு ஜோக் ஆக தெரியும், ஆனால் அப்படியில்லை. இது எனக்கான சவால். இதுவரை 6 மாநிலங்களுக்கு சென்று விட்டேன். வெறும் 2,000 ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளேன்' என்கிறார், அவர். தள்ளுவண்டி கடையில் சாப்பிடுவது, ரயிலில் சாதாரண வகுப்பு பெட்டியில் பயணிப்பது என, அவரது குறைந்த செலவு சுற்றுலா பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. 'பிளையிங் பிஷ்' என்ற புனைப்பெயர் கொண்ட அந்த பெண்மணியின் பதிவு, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அதைக்கண்ட வலைதளவாசிகள், 'இந்தியாவை 10 ஆயிரத்தில் சுற்றி வர முடியுமா, முடியவே முடியாது' என்று கமென்ட் செய்து வருகின்றனர். 'காசே இல்லாமல் பலர் சுற்றி வரும்போது ஏன் முடியாது' என்று எதிர் கேள்வி எழுப்புகின்றனர், இன்னொரு தரப்பினர்.

கோதாவரி ஆரத்தியில் புதிய கின்னஸ் சாதனை



Latest Tamil News
மஹா., மாநிலம் நாசிக்கில் கோதாவரி ஆற்றில் நடந்த சிம்மஸ்த கும்ப மேளாவில், பழங்குடி பக்தர்கள் நிகழ்த்திய ஆரத்தி நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஒரே நேரத்தில் 6,233 பழங்குடி பக்தர்கள், ஒன்றிணைந்து கோதாவரி தாய்க்கு ஆரத்தி காட்டி வழிபட்டனர். நதிக்கரை எங்கும் ஒளிமயமாக காட்சி அளித்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் படங்கள், வீடியோக்கள், வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

மறுத்தார் மாப்பிள்ளை; மணப்பெண் போராட்டம்



Latest Tamil News
நிச்சயதார்த்தம் செய்த மாப்பிள்ளை திருமணம் செய்ய மறுத்து விட்டார்; ஆத்திரம் அடைந்த மணப்பெண் அனுபமா, பக்கத்து ஊரில் இருந்த பிரமாண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி நின்று கொண்டார்; இறங்கச் சொன்னாலும் மறுத்தார்; 'குதித்து விடக்கூடாதே' என்பது ஊர் மக்களின் கவலை. உ.பி., மாநிலம் கவுசாம்பியில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ, வலைதளங்களில் வைரல் ஆனது. போலீசார், அவரிடம் மணிக்கணக்கில் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர். அதன் பிறகே, தண்ணீர் தொட்டியில் இருந்து இறங்கி வந்தார் அனுபமா. பெற்றோரிடம் அவரை ஒப்படைத்த பிறகே போலீசார், நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Advertisement