எல்லை போராட்ட தியாகிகள் நாளா? தமிழ்நாடு நாளா?: சர்ச்சை கிளப்பும் திமுக
சென்னை: 'நவ., 1ம் தேதி, எல்லை போராட்ட தியாகிகள் நாள் என்ற வரலாற்றை, அரசியலுக்காக மாற்ற வேண்டாம்' என, தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: நவ.,1ம் தேதியை, 'தமிழ்நாடு நாள்' என, தமிழக ஆட்சியாளர்கள் வாழ்த்து கூறுகின்றனர். கடந்த 1956, நவ., 1ம் தேதி மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. எனவே, நவ.1 என்பது, மொழியுரிமைக்காக, வாழ்நாளை அர்ப்பணித்தவர்களை, நினைவு கூர வேண்டிய நாள். அது, எல்லை போராட்ட தியாகிகள் நாள்.
'மெட்ராஸ் ஸ்டேட்' பெயரை, 'தமிழ்நாடு' என மாற்றக்கோரி, உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் உயிர் நீத்தார். கடந்த 1967 ஜூலை 18ல், அண்ணாதுரை தலைமையிலான அரசு, சென்னை மாகாணத்தின் பெயரை, 'தமிழ்நாடு' என்று மாற்ற, சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியது.
ஜூலை 18, சங்கரலிங்கனார் உயிர் தியாகத்திற்கும், தமிழக மக்களின் மொழி உணர்விற்கும் அங்கீகாரம் கிடைத்த நாள். எனவே தான், 'ஜூலை 18, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்' என, கடந்த 2021ல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். எனவே, வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழகத்தின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, 'ஒருவர் பிறந்த தினத்தில், பிறந்த நாள் விழா கொண்டாடுவீர்களா அல்லது பெயர் வைத்த நாளை, பிறந்த நாளாகக் கொண்டாடுவீர்களா' என, சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்காக, தமிழக எல்லையை காக்க போராடிய, மறைந்த தலைவர் ம.பொ.சிவஞானம், கடந்த 1956 அக்.,26ல் வெளியிட்ட, 'நவ.,1ல், தமிழரசு வாரம் கொண்டாடுவோம்' என்ற அறிக்கையையும், பகிர்ந்து வருகின்றனர்.
Was Tamilnadu carved to be a separate state? Distorted and disinformed. The erstwhile State of Madras comprising of current Tamil Nadu, APincluding Telengana, Karnataka and Kerala was reorganised on linguistic basis. Those states were born and not Tamil Nadu. Erstwhile State of Madras lost most of its territory. That some parts of Kanyakumari district and areas adjacent to Thiruthani became part of Madras State is a different story altogether- correction applied to the aberrations in the reorganisation. Madras state continued to be known as Madras State till 1967. Although Tamil Nadu, Tamizhagam were in usage, official name Madras state continued till its name was changed to Tamil Nadu in 1967, signal contribution by DMK Government?
கருணாநிதியின் பிறந்தநாள் எது ? தட்சணாமூர்த்தி என்ற பெயரை கருணாநிதி என்று பெயர் மாற்றிய நாளா ?? சிந்திக்கும் அறிவு மலிங்குவிட்டதா ??
we are Tamilan we appreciate November 1st is a Tamilnadu day
இந்திய விடுதலைக்கும் தீய மு க வுக்கும் என்ன சம்பந்தம்? தியாகம் என்பதற்கு தீய மு க வின் அகராதியில் ஒண்ணுமே இல்லை. அது ஒரு குடும்பம் சார்ந்த மன்னர் ஆட்சி என்று நினைப்பு.
அப்போது தெலுங்கு தமிழர் நாள் என்று அறிவித்து வீட்டில் தலீவர் அகமகிழ்வார். தீம்கா தீய சக்திக்கு வேலை வேறு இல்லை இல்லாத பூச்சாண்டியெல்லாம் காட்டிக் கொண்டிருக்கிறது். மக்கள் இவர்களை உதைத்து ஆந்திர எல்லைக்கு அப்பால் அனுப்ப வேண்டும்.
தமிழ் நாடு நாளுக்கு இவ்வளவு சர்ச்சைகளா?மேலும்
-
அரசு வீடுகளில் தனியாரை வெளியேற்ற நோட்டீஸ்! உள்வாடகை மோசடிக்கு முடிவுகட்ட வேட்டை
-
பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்
-
ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் ரத்து
-
எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிப்பு; போட்டியின்றி எம்பியாகிறார் ஹர்தீப் சிங் புரி
-
டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்
-
பனை விதைகள் நடவு