இடைத்தேர்தலுக்கு தயாராக இருங்கள்: அதிமுக - மா.செ.,க்களுக்கு பழனிசாமி உத்தரவு
சென்னை: சென்னை - ராயப் பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று அக்கட் சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்த பின், காலியாக உள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ள மாவட்ட செயலர்களுடன், பழனிசாமி தனியே ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், பழனிசாமி பேசியது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது; இந்த தேர்தல் நமக்கு பாடமாக அமைந்துள்ளது. அடுத்து வரும் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றியை உறுதி செய்யும் வகையில், தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும்.
மாவட்டச் செயலர்களுக்கு, ஒவ்வொரு தொகுதியிலும், வார்டுகள் பிரித்து தேர்தல் பணி பொறுப்பு ஒப்படைக்கப்படும். தேர்தல் வெற்றிக்கு வேகமாக உழைக்க அனைவரும் தயாராக வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், தி.மு.க., ஆட்சியில் தான் செயல்படுத்தப்பட்டன. அதை பற்றி நாம் எந்த கருத்தும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இனிமேல் வாக்காளர்கள் பட்டியல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உள்ளூர் மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தி, போராட்டங்களை நடத்த வேண்டும். தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்ட, கட்சியின் ஆண்டு விழா, பொதுக்கூட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும்.
மழை காரணமாக, சில மாவட்டங்களில், கூட்டம் நடத்தப்படவில்லை. நடக்காத ஊர்களில் கூட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும். புயல், மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, பழனிசாமி தெரிவித்தார். இவ்வாறு கூறினர்.
என்னாது மறுபடியும் தேர்தலில் போட்டியா... மறுபடியும் தோல்வியை தழுவினால்... 12 தோல்வி பழனிச்சாமி என்று பெயரை மாற்ற வேண்டியது வரும்..... பரவாயில்லையா ?
எடப்பாடியார் அவர்களே எதுக்கு தயாரா இருக்கணும் ன்னு தெளிவா சொல்லுங்க. நீங்களும் தவெக அரசை சோப்ளாங்கி ன்னு சொல்லி தன்னோட கேவலத்தை வெளிச்சம் போட்டு காண்பித்து வாங்கி கட்டிக்கொண்ட முக ஸ்டாலினும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆயிட்டிங்கன்னு ஒரே அலப்பறையா இருக்கே. அதுக்கு முடிவு கட்டப் போறீங்களா? இல்லியா? அதுக்கு நீங்க தயாரா இல்லியா?. அதுக்கு நீங்க எதை சொன்னாலும் அதை கேக்க நாங்க தயாரா இருக்கோம். அதுனால அதுக்கு பிரையாரிட்டி குடுங்க.
ஈகோசாமி சிந்திக்க வேண்டும். கால மாற்றத்தால் நடப்பவைகளுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். கண்ட கண்ட சில்லறை கட்சி ஆட்கள் எல்லாம் பதவிக்கு வந்த பிறகு அதிமுக கட்சியினர் மனம் வெதும்பி விட மாட்டார்களா. த வெ க வுடன் கூட்டணி அமைத்து பொழைக்கிற வழியை பாருங்கள். திமுகவுடன் மட்டும் கூட்டணி வைத்தால் மக்கள் அதிமுகவை முழுவதும் புறக்கணித்து விடுவார்கள்
அடுத்த பல்பு வாங்க.....
திமுகவுக்கு தோள்கொடுக்கும் இவரும் தீய சக்தியே. எம் ஜியார் என்ற மாமனிதன் உருவாக்கிய கட்சியை. , ஜெயல்லிதா என்ற பெண்மணி வளர்த கட்சியை கட்டெறெம்பு சைஸூக்கு கொண்டு வந்து விட்டார். இனிமேல திமுகவுடன் இணைக்க அச்சாரம் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. அதிமுகவினரே நீங்கள் இனி அண்ணாமலையாரை நோக்கி முன்னேறி செல்லுங்கள.
பத்து தோல்வி பழனிச்சாமி என்பது பட்டப் பெயர் ஆகிவிட்டது. ஆனால் அதுவே இனி 20 தோல்வி பழனிச்சாமி என்று கூற வேண்டியது வரும். எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜென்மம். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.மேலும்
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு