வீடு தேடி விபிஜே அழைப்பிதழ்; காலையில் மலர்ந்த புன்னகைகள்
- நமது நிருபர் -
உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் என்றால் சென்னைவாசிகளுக்கு சட்டென தெரியும். நுாற்றாண்டு அல்ல, அதற்கும் மேலாக கால் நுாறாண்டு கடந்த பிரபலமான நகைக்கடை.
தமிழக தலைநகரில் அண்ணா சாலை என அழைக்கப்படும் அன்றைய மவுன்ட் ரோடில், புகழ் பெற்ற ஜெமினி சர்க்கிளில் அமைந்துள்ள நிறுவனம். ஜெமினி ரவுண்டானாவை தாண்டி செல்லும் எவருடைய கண்களுக்கும் தப்பாத முத்திரை விபிஜே.
பிரபலமான பெரிய நகை, ஜவுளி நிறுவனங்கள் எல்லாம் சென்னைக்கு வெளியே கிளைபரப்பி ஒவ்வொரு நகரிலும் கொடி நாட்டியபோதிலும், விபிஜேவுக்கு அதில் ஆர்வம் வரவில்லை. சென்னைக்கு வெளியே அந்த பெயரை ஒரு கடையின் முகப்பில் காண வேண்டும் என்றால், நீங்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்துக்கு தான் செல்ல வேண்டும். அண்ணா சாலை, அண்ணா நகரை அடுத்து டல்லஸ் நகரில் விபிஜே ஷோரூம் ஜொலிக்கிறது.
தங்கம் வெள்ளி பிளாட்டினம் வைரம் ஜடாவ் நகைகளுக்கு உலகப்புகழ் பெற்ற விபிஜே நிறுவனம், தமிழகத்தில் சென்னைக்கு அப்பால் ஒரு நகரில் கிளை திறக்க தீர்மானித்தபோது, துள்ளி வந்த பெயர்களில் முதலாவதாக நின்றது கோயம்புத்தூர். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கொங்கு மண்டல கோடீஸ்வர குடும்பங்கள் பலவற்றை ஏற்கனவே சென்னையில் தன் வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது விபிஜே.
ஆனால், ஒரு விஷயம் விபிஜே நிறுவனத்துக்கு சின்னதொரு கேள்விக்குறியாக உறுத்தியது. நாட்டின் புகழ் பெற்ற நகை நிறுவனங்கள் எல்லாமே கோவையில் பிரமாண்டமான ஷோரூம் அமைத்து விமரிசையாக வியாபாரம் செய்து வருகின்ற சூழலில், இந்த மாநகரின் மக்களுக்கு தன் வருகையை எவ்வாறு தெரியப்படுத்துவது என்ற யோசனை தான் அது. நகைகளை வடிவமைப்பதில் தலைசிறந்த உலக நிபுணர்களை வியக்க வைத்த விபிஜே-யால் இந்த விஷயத்தில் சட்டென ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.
அப்போது தான் 'தினமலர்' நாளிதழ் அவர்களின் ஞாபகத்தில் எழுந்தது. கோவையின் நம்பர் 1 நாளிதழ் என்பதை தாண்டி, புதுமையான சிந்தனை, புதிய அணுகுமுறை காரணமாக வாசகர்கள், விளம்பரதாரர்கள் மத்தியில் தினமலர் சம்பாதித்துள்ள நல்லெண்ணமும் அபிமானமும் விபிஜேயை இழுத்தன. தினமலர் விளம்பர பிரிவு இயக்குனரை அணுகினர் விபிஜே விளம்பரங்களை கவனிக்கும் நிறுவனத்தின் நிர்வாகிகள்.
அதையடுத்து நடைபெற்ற ஆலோசனையில், கோவை மக்களை குடும்ப விழாவுக்கு அழைப்பது போல அழகான அழைப்பிதழ் அச்சடித்து வீடு தேடி கொண்டு சேர்ப்பது என்ற யோசனை வெளிப்பட்டது. வீட்டு உபயோக பொருட்கள், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எல்லோரும் வாங்க கூடியவை; தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என்பது அந்த ரகத்தில் சேராதே என்ற நியாயமான கேள்வி விபிஜே விளம்பர நிர்வாகிகளுக்கு எழுந்தது.
கோவை தினமலர் சந்தாதாரர்கள் பட்டியல் அந்த கேள்விக்கு உடனடி பதிலாக அமைந்தது. வாங்கும் சக்தி படைத்த வாசகர்களை மிக அதிகமாக கொண்டுள்ள நாளிதழ் தினமலர் என்ற சான்றளிக்கப்பட்ட சர்வே காட்டிய உண்மை சந்தேகத்தை சிதறடித்தது. என்றாலும், பல்லாயிரம் வீடுகளுக்கு அதிகாலையில் நாளிதழோடு விபிஜேயின் அழைப்பை கொண்டு சேர்ப்பது சாத்தியமா? என்ற நெருடல் முற்றிலுமாக நீங்கவில்லை, ஞாயிறு விடியும் வரையில்.
அதன் பிறகு நடந்தது தமிழ் இதழியல் சரித்திரத்தில் புத்தம்புது அத்தியாயம். முக்கால் லட்சம் வீடுகளுக்கு விபிஜேயின் அழைப்பிதழ் கவரில் 34 பக்க தினமலர் இதழை மிகக்குறுகிய நேரத்தில் வினியோகம் செய்து சாதனை படைத்துள்ளனர் தினமலர் முகவர்கள். புதுமையான முயற்சிகளுக்கு எப்போதும் கைகொடுக்க தயங்காத முகவர்களும், லைன்பாய்ஸ்-ம் உற்சாகமாக இந்த பெரும்பணியை நிறைவேற்றிக் கொடுத்தனர்.
விடுமுறையாக இருந்தும், நேற்று காலை முதல் இடைவிடாத தொலைபேசி அழைப்புகள், வாட்சப் குறுஞ்செய்திகள் பாராட்டாக வந்து கொண்டிருக்கின்றன. நேரில் சந்தித்த கோவை மக்கள் கருத்தும் மகிழ்ச்சி அளித்தது.
@block_P@
வெள்ளலூர் ராதாமணி: எப்போதும் போல இன்று காலையில் பேப்பர் போடும் வண்டியின் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்தேன். விபிஜே கவரில் தினமலர் கொடுத்தபோது வியப்பாக இருந்தது. உள்ளே திருமண அழைப்பிதழ் போல அழகான இன்விட்டேஷன் இருந்தது, நமக்கென்று தனியாக பத்திரிகை அனுப்பி அழைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் வருகிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
போத்தனூர் பிரேமா: பார்க்கவே சந்தோஷமாக இருந்தது இந்த அழைப்பு. நிச்சயமாக விபிஜே கடைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்டிவிட்டது. அக்கம் பக்கத்து வீட்டாரிடமும் பெருமையோடு காட்டினோம். சொந்தக்காரர்களுக்கு போன் போட்டு இப்படி வந்திருக்கிறது பார்த்தீர்களா என்று கேட்டேன். அவர்களும் தினமலர் வாசகர்கள். மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.
ஆர்.எஸ்.புரம் அனிதா: இது ஒரு நல்ல ஐடியா. போஸ்டர் போன்று பேப்பரில் இல்லாமல், இப்படி வந்திருப்பது நல்ல புதுமை. இது நல்ல ரீச் கொடுக்கும். பத்தோடு பதினொன்றாக இல்லாமல், வித்தியாசமான முறையில் செய்துள்ளது தினமலர்.
பீளமேடு விஜயன்: வழக்கமாக பேப்பருக்குள் துண்டு நோட்டீஸ் வைப்பார்கள். இது பார்த்த உடனே தனியாக ஒரு எலைட் தோற்றத்தை தந்தது. கவரில் இருந்த கோல்டு நிறம், காலையில் எழுந்தது பார்க்கும்போது மனசுக்கு மகிழ்ச்சியை தந்தது. வழக்கமாக பேப்பர் போடுபவர் கொடுத்ததால் நம்ம தினமலர் என்று தெரிந்தது. இல்லையென்றால், ஏதோ விழா அழைப்பிதழ் என்றே நினைத்திருப்பேன்.
சிங்காநல்லுார் நீலா: அமரேந்திரன் உம்மிடி, ஜிதேந்திரா உம்மிடி என்ற பெயர்களை இன்விடேஷனில் பார்க்க வியப்பாக இருந்தது. அண்ணா மேம்பாலம் வழியாக காரில் செல்லும்போது விபிஜே போர்டு பார்த்திருக்கிறேன். நம் கோவையில் அவர்கள் ஷோரூம் திறப்பது பெருமையாக இருக்கிறது. தினமலர் எப்போதும் வேற லெவல்.
கணபதி ராஜகனி: நல்ல முயற்சி. பேப்பர் பிரியாமல் பார்ப்பதற்கே அழகாக கவுரவமாக இருந்தது. ஒரு கடை திறப்பு விளம்பரத்தை இவ்வளவு புதுமையாக, கவர்ச்சிகரமாக செய்ய முடியுமா என்பது வித்தியாசமான சிந்தனை. நகை வாங்குபவர்களை மட்டுமல்ல, எல்லோரையுமே விபிஜே கடைக்கு செல்ல துாண்டும்.block_P
எல்லாம் சரிதான். ஆனால், பக்கத்துக்கு ஊர்களுக்கு மேட்டுப்பாளையம், காரமடை, பாலக்காடு, ஊட்டி, திருப்பூர், ஈரோடு, ... இந்த கடை திறப்பது எப்படி தெரியும்? அங்கு செல்வந்தர்கள் இல்லையா? அவர்கள் வாங்க மாட்டார்களா?
A video upload for online Dinamalar readers would be ideal.
மாத்தி யோசிச்சிக்கிறாங்க நூறு சதவீத வெற்றி என நினைக்கிறேன்
விளம்பரத்தை எப்படி விஞ்ஞான முறையில் பண்ணுறாங்க...
ராஜூ நீங்க அநியாயமா விஞ்ஞான முறை ன்னு ஒரு வார்த்தையை போட்டு கருணாவை ஞாபகப்படுத்தி உட்டுட்டீங்க. இந்த நல்ல வேளையில் கட்டு மரம் ஞாபகம் வந்தததுக்காக வருத்தப்படுகிறேன். இருந்தாலும் பழக்க தோஷத்தை மாத்திக்க முடியல. மத்தபடி வி பி ஜேக்கும் தினமலருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.