தந்தையை கொன்றதால் ஆத்திரம் தொழிலாளியை தாக்கியவர் கைது
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை அருகே செப்புக்குட்டையை சேர்ந்தவர் சக்திவேல், 30. கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல், 55, என்பவருக்கும் கடந்த ஏப்., மாதம் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சக்திவேல், கத்தியால் குத்தி கதிர்வேலை கொலை செய்தார். தேன்கனிக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட சக்திவேல், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார்.
கடந்த, 30ம் தேதி, எஸ்.குருபள்ளி - செப்புக்குட்டை சாலையில் சக்திவேல் தன் பைக்கில் சென்றார். அப்போது அங்கு வந்த, கொலையான கதிர்வேலின் மகன் மணிகண்டன், 25, தன் நண்பர்களுடன் சேர்ந்து, என் தந்தையை கொலை செய்து விட்டு, ஊரில் பிரச்னை செய்து வருகிறாயா எனக்கேட்டு, சக்திவேலை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.இதில் காயமடைந்த சக்திவேல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார்படி, மணிகண்டனை நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும், சொப்புக்குட்டையை சேர்ந்த மணி, நாகேஷ், அருள் ஆகிய, 3 பேரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
-
காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு