'குரூப் - 2' தேர்வில் 2,056 பேர் 'ஆப்சென்ட்'
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2 (குரூப் - 2)க்கான முதல்நிலை எழுத்து தேர்வு மையத்தை, கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2ல் உள்ள பதவிகளுக்கான தேர்வு, 33 மையங்களில் நடந்தது.இத்தேர்வு பணிகளை கண்காணிக்க சப்-கலெக்டர் நிலையில், 6 பறக்கும் படை அலுவலர்கள் ஒவ்வொரு வட்டத்திலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்கள், 8 நடமாடும் அலகு அலுவலர்கள், 33 ஆய்வு அலுவலர்கள் மற்றும், 33 வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் நடமாடும் மருத்துவகுழுக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
இத்தேர்வுக்கு, 9,438 பேர் விண்ணப்பித்ததில், 7,382 பேர் தேர்வு எழுதினர். 2,056 பேர் தேர்வெழுதவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதில், தாசில்தார் ராஜலட்சுமி, பி.டி.ஓ., உமா சங்கர், தலைமை ஆசிரியர் நளினி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும்
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
-
காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு