பொம்மிடியில் கோவை எக்ஸ்பிரஸ் நிறுத்தம் கேட்டு அமைச்சருக்கு மனு

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடியில் கோவை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ்கள் நிறுத்தம் வேண்டி, பொம்மிடி தென்னக ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் காமராஜ், செயலாளர் அறிவழகன் தலைமையில், பொதுமக்கள் வணிகர்கள், ரயில் பயணிகள், மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், சேலம், டி.ஆர்.எம்., தென்னக ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பயண வசதியை மேம்படுத்தும் வகையில், கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் மைசூர் எக்ஸ்
பிரஸ்கள் பொம்மிடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement