நான் செந்தில் பாலாஜியா இருந்திருந்தா அந்த பணம் என் வீட்டுக்கு வந்திருக்கும்; அமைச்சர் விக்னேஷ்
கோவையில் அமைச்சர் விக்னேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒரு பாட்டில் விலை எம்ஆர்பி 140 ரூபாயாக இருந்தது. பாட்டில் திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் தருவதாக, மொத்தம் 150 ரூபாய் வாங்குகிறார்கள். அதுபோல் கடந்த பார்டியின் பண்ட் ஒரு 10 ரூபாய். மொத்தம் 160 ரூபாய் வாங்கினார்கள். நாங்கள் பார்டி பண்டை ஒழித்துவிட்டோம்.
நான் செந்தில்பாலாஜியாக இருந்து இருந்தாலோ, கடந்த கால அமைச்சர்கள் போல இருந்து இருந்தாலோ, அந்த பணம் எங்கள் வீட்டிற்கு வந்து இருக்கும். முதல்வர் வழியில் வந்த நாங்கள் அது மக்கள் பணம்; அது மக்கள் மட்டும் தான் போக வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கிறோம். டாஸ்மாக் தான் முக்கிய பிரச்னையாக நேற்று இருந்து இருக்கிறது.
மது கிடைக்காதவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தனர். எனக்கு ரொம்ப சந்தோஷமாக தான் இருந்தது. அன்றைக்கு ஒருநாள் குடிக்காமல் இருந்தார்களே, அவர்கள் குடும்பம் ரொம்ப சந்தசோஷமாக இருந்து இருக்கும். ரிட்டர்ன் வராத பாட்டில் வந்ததா கணக்கு வருது; தமிழகத்திலேயே பெரிய ஊழல் இந்த பாட்டில் ஊழல் தான். இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
கோவையில் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
விக்னேஷ் செந்தில் பாலாஜியா இருந்திருந்தா விக்னேஷைப் பார்த்து "பாட்டிலுக்கு 10 ரூபா விக்னேஷ்" என்று பாடுவார்கள். அவ்வளவுதான் நம் மக்களின் பலம். இந்த ஆட்சியில் பாட்டிலுக்கு 10 ரூபா வாங்கவில்லை பார்ட்டி பண்ட் கட்சி நிதி வாங்கவில்லை என்கிறீர்கள் அப்படி என்றால், அந்த பணம் இப்போது எங்கே போகிறது? மக்களின் கஜானாவிற்கு வருகிறதா? அப்படி ஒன்றும் தெரியவில்லையே. அப்படியே அந்த பணம் மக்களின் கஜானாவிற்கு வந்தாலும் நீங்க ரோடு ஷோ போட்டே அந்த பணத்தை காலி செய்துவிடுவீர்களே மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் பல கோடிகள் லஞ்சம் வாங்கினார் இப்போது நீங்கள் வாங்கவில்லை என்றீர்கள் ஆனால் தனியார் பள்ளிக்கட்டணம் குறையவில்லையே முன்பு தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பெற்றோர்களின் பணம் மகேஷ் க்கு போனது இப்போது அந்த பணம் தனியார் பள்ளிகளின் முதலாளிகளுக்கேப் போகிறது மக்களுக்கு இதனால் எந்த பயநும் இல்லையே. தனியார் பள்ளிகளிடம் கட்டணத்தை குறைக்க சொல்ல உங்களால் முடியவில்லையே? ஒரு மாற்றமும் இல்லை ஏமாற்றம்தான் இருக்கிறது.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. பாட்டிலை திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏன் வருகிறது. பாட்டிலை திரும்ப வாங்குவதால் அரசுக்கு என்ன லாபம். வாங்காவிட்டால் என்ன நஷ்டம். அந்த பாட்டில் யாருக்கு தேவைப்படுகிறது.. 10 ரூபாய்க்கு வாங்கும் பாட்டிலை அரசு எவ்வளவு ரூபாய்க்கு யாரிடம் விற்பனை செய்யப்போகிறது. காலி பாட்டிலை உடைத்து விற்பனை செய்வார்களா இல்லை உடைக்காமல் விற்பனை செய்வார்களா. 10 ரூபாய் எப்போதும் போல அதிகம் வாங்குவதற்கு எதற்கு பாட்டு பாட வேண்டும்..
எல்லாவற்றுக்கும் பார்ட்டி பண்டு வாங்கினார்கள் என குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் திமுக மீது ஒரு வழக்கும் ஆதாரத்துடன் போடமாட்டாங்க. திராவிஷ பாசம்.
அடடா அமைச்சரின் பேச்சு புல் அறிக்குதப்பா.மேலும்
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்கு மன்னிப்பு கோரினார் பாலிவுட் நடிகர் இம்ரான் கான்
-
இரும்பு பைப் திருட்டு
-
அடுத்தடுத்து தர்ணா போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
-
கைதி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
-
புதிய குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதி மோகன்தாஸ் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
-
சாலை சீரமைப்பு பணி ஆணையர் ஆய்வு