ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
போபால்: புலிகள், சிவிங்கிப்புலிகள் கழுத்தில் செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய 'காலர்' பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் நடமாட்டத்தை கிரிக்கெட் போட்டியைப் போல, நிமிடத்திற்கு நிமிடம் 'லைவ்' ஆக கண்காணிக்க முடியாது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் உள்ள 15 சிவிங்கிப்புலிகள் செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய 'காலர்' மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த காலர்களில் இருந்து உடனுக்குடன் அல்லது தொடர்ச்சியான தகவல்கள் கிடைப்பதில்லை. குது குறித்து குனோ தேசிய பூங்கா அதிகாரிகள் கூறியதாவது:
செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய ஜிபிஎஸ் காலர்கள் தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும் சாதனம் அல்ல. அவ்வாறு தொடர்ந்து 'லைவ்'வாக தகவல்களை அனுப்பினால், அதன் பேட்டரி ஒரே நாளில் தீர்ந்துவிடும். ஒரு காலரின் விலை ரூ.4 முதல் 5 லட்சம் வரை இருக்கும். பேட்டரி தீர்ந்துவிட்டால் அடர்ந்த காட்டில் திரியும் விலங்கைப் பிடித்து காலரை மாற்றுவது சாதாரண காரியம் அல்ல.
எனவே, பேட்டரி 2 ஆண்டுகள் வரை நீடிக்க வேண்டும் என்பதற்காக, சிவிங்கிப்புலிகளின் காலர்கள் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே இருப்பிடத் தகவலை (Location) அனுப்பும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன. அடர்ந்த மரங்களின் மறைவு அல்லது மோசமான வானிலை காரணமாக ஒரு சிக்னல் தவறினால், அடுத்த தகவல் கிடைக்க 12 முதல் 18 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிவிங்கிப்புலிகள் நாளொன்றுக்கு சராசரியாக 6 முதல் 8 கி.மீ., தூரமும், சில நேரங்களில் 15 கி.மீ., தூரத்திற்கும் அதிகமாகவும் பயணிக்கின்றன. காடுகளுக்குள் வாகனங்கள் நேர்கோட்டில் செல்ல முடியாது என்பதால், செயற்கைக்கோள் காட்டிய இடத்திற்கு வனக் குழுவினர் நேரில் சென்று வி.எச்.எப்., ஆன்டெனா மூலம் தேடும் முன்பே, அவை பல கிலோமீட்டர் தூரம் நகர்ந்து விடுகின்றன.
செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தேடுதல் பரப்பளவை மட்டுமே சுருக்குகிறது; விலங்குகளைக் கண்டுபிடிப்பதற்கு வனத்துறையினரின் நேரடி களப்பணியும் கடின உழைப்பும் மட்டுமே பிரதானமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Drone can be usedமேலும்
-
விதைகளை தின்று தீர்க்கும் பறவைகள் தவிக்கும் விவசாயிகள்
-
ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸில் ‘பிக் தீபாவளி திருவிழா’
-
கட்டுமான நுட்பம்(Tag) கட்டட பகுதிகளை முன்கூட்டியே தயாரிக்கும் முறை!
-
கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்களுக்கு தடை!
-
அமெரிக்க மக்கள் விரும்பிய 'முதல்முறை'.... தேர்தல் முடிவில் எதிரொலித்த விஷயத்தை கவனித்தீர்களா?
-
லண்டனில் சர்வதேச வர்த்தக மாநாடு புதுச்சேரி அமைச்சர் பங்கேற்பு