தீர்மானம் கிழிப்பு: கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்
குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, தரகம்பட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
கடவூர்
ஊராட்சி ஒன்றிய ஆணையர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். கூட்டத்தில்
பொதுமக்கள் கூறுகையில், 'தரகம்பட்டி ஊராட்சி செயலர், பல்வேறு ஊழல்
குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு, வரவு-செலவு கணக்குகளை மறைத்து
வருகிறார்.
இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பினால்,
உரிய பதிலும் அளிப்பதில்லை. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்
மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோரிடம் புகாரளித்தும், எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், சாதாரண மக்கள், 100 நாள்
வேலை திட்டத்தில் வேலை பெற வேண்டுமென்றால், வீட்டு வரி, குடிநீர் வரி
கட்டினால் தான் வேலை தர முடியும் என, மிரட்டுகின்றனர்.
கடந்த அக்.,
2ல் காந்தி ஜெயந்தி அன்று நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில்,
தரகம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக காற்றாலை அமைத்துள்ளனர்.
அவற்றை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால்,
அந்த தீர்மானம் பக்கத்தை, ஊராட்சி செயலர் கிழித்து எறிந்துள்ளார் என,
குற்றம் சாட்டினர். தொடர்ந்து, தரகம்பட்டி ஊராட்சி செயலாளர் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதுகுறித்து,
ஊராட்சி ஒன்றிய ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில், ''கடந்த கிராமசபை
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான பேப்பரை கிழித்தது குறித்து
விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மேலும்
-
வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை
-
தீபாவளி மாமூல் வாங்குவதில் மோதல் துணிக்கடையில் தள்ளுமுள்ளு: இரு போலீசார் அதிரடி இடமாற்றம்
-
மொபைல் போனை உடைத்ததால் தந்தையை கொன்ற மகள்
-
புதுகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வர் விஜய் திறப்பு
-
போதைப்பொருளை வைத்து சிவசேனா நிர்வாகியை சிக்க வைத்த போலீஸ்: ரகசிய கேமராவில் பதிவானதால் சர்ச்சை
-
ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி.,; பெண் தொழிலாளி 'ஷாக்'