புதுகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வர் விஜய் திறப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு, 68 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பில்; 44 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். பின்னர், 11 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 70 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 62 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 13,676 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இவ்விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஆனந்த், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமதுபர்வேஸ், எம்.பி.,க்கள் துரைவைகோ, ஜோதிமணி, நவாஸ்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய்-யிடம் புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி குறித்து, மனு அளிக்க வந்த புதுக்கோட்டையில் த.வெ.க., சார்பில் போட்டியிட்ட சரிப் என்பவரை போலீசார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு அறையில் அ டைத்து வைத்தனர். முதல்வர் சென்ற பின்பு அவரை அனுப்பினர். இது குறித்து, அவர் முதல்வரை சந்தித்து புகார் அளிப்பதாக தெரிவித்தார்.

Advertisement