மொபைல் போனை உடைத்ததால் தந்தையை கொன்ற மகள்
சூரத்: குஜராத்தில் சூரத்தின் அம்ரோலி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங், 55. இவர் தன் மனைவி மஞ்சுபென் மற்றும் இளைய மகள் காஜல், 22, உடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த மாதம் 31ம் தேதி இரவு வீட்டில் காஜல், தன் மொபைல் போன் பயன்படுத்தி வந்தார்.
அப்போது வீட்டு வேலைகளை செய்ய தனக்கு உதவும்படி ரமேஷ் சிங், காஜலை அழைத்துள்ளார். ஆனால், உரிய பதில் அளிக்காமல் காஜல் மெத்தனமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் சிங், காஜலின் மொபைல் போனை வாங்கி, தரையில் போட்டு உடைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காஜல், தன் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், அது கைகலப்பாக மாறியது. அப்போது, சமையலறையில் இருந்த பிரஷர் குக்கர் மூடியால் தந்தையின் தலையில் பலமாக தாக்கினார். அதன்பின் கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காஜலின் தாய் மஞ்சுபென் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து காஜலை கைது செய்தனர். உயிரிழந்த ரமேஷ், காஜலின் வளர்ப்புத் தந்தை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும்
-
படுக்கையானது ஓடுபாதை; விமான பயணியர் வெறுப்பு
-
விரக்தி!பயணியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கண்துடைப்பாக நடந்த பேச்சுவார்த்தையால் மக்கள்
-
தாலுகா அலுவலகத்திற்குள் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்
-
தேனி, கோவையில் இன்று இடி, மின்னலுடன் கனமழை
-
பழநி கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
-
மீட்டெடுக்கப்படுமா ... அழிவின் விளிம்பில் கொடைக்கானல் மலை ஆரஞ்சு : நோய் தாக்குதலால் சாகுபடி பரப்பும் குறைந்தது