வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை
புதுச்சேரி: புதுச்சேரியில் நள்ளிரவில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி ரோடியர்பேட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தமிழ்செல்வன், 33; திருமணமாகி சுயம்பு, 28; என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி மற்றும் மகள் கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்ச்செல்வன் நேற்று இரவு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, வாணரப்பேட்டை நேதாஜி நகரில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு இரவு 10:00 மணியளவில் கல்லறை வீதியில் ஸ்கூட்டரில் சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், தமிழ்ச்செல்வனை வழிமறித்து, சரமாரியாக முகத்தில் கத்தியால் வெட்டினர்.
இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து இறந்தார். தமிழ்செல்வன் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
கொலை சம்பவம் நடந்த இடத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதுகுறித்து தகவலின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள் ஜிந்தா கோதண்டராமன், வம்சீத ரெட்டி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மேலும், இச்சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய 5 பேரையும் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
@block_B@
கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வன், அந்த பகுதியில் வட்டி தொழில் செய்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஸ்பா நடத்துபவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், இக்கொலை சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.block_B
வட்டி தொழில், ரியல் எஸ்டேட் ? குண்டு பசங்க ரவுடி தெனம் செய்தாலும் அதற்க்கு டீசண்ட்டா ஒரு பெயர் வைத்துக்கொள்வார்கள்மேலும்
-
படுக்கையானது ஓடுபாதை; விமான பயணியர் வெறுப்பு
-
விரக்தி!பயணியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கண்துடைப்பாக நடந்த பேச்சுவார்த்தையால் மக்கள்
-
தாலுகா அலுவலகத்திற்குள் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்
-
தேனி, கோவையில் இன்று இடி, மின்னலுடன் கனமழை
-
பழநி கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
-
மீட்டெடுக்கப்படுமா ... அழிவின் விளிம்பில் கொடைக்கானல் மலை ஆரஞ்சு : நோய் தாக்குதலால் சாகுபடி பரப்பும் குறைந்தது