பஸ் வசதி வேண்டி கோரிக்கை
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
அருகே உள்ள ஈசநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்,
20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஆனால், ஈசநத்தம்
மற்றும் அருகில் உள்ள சிற்றுார்களுக்கு சரியான போக்குவரத்து வசதி
இல்லை. சரியான நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால், பள்ளி, கல்லுாரி
செல்லும் மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள், கூலி வேலை செய்வோர் மற்றும்
மருத்துவ உதவிகளுக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்கள்
பாதிப்படைந்துள்ளனர்.ஈசநத்தம் மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளுக்கு, கரூரில் இருந்தோ அல்லது அரவக்குறிச்சியில் இருந்தோ
தற்போது வரை சரியான நேரத்திற்கு பஸ்கள் இல்லை என்பது இப்பகுதி
மக்களுக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது.
போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து சரியான
நேரத்திற்கு கரூர் மற்றும் அரவக்குறிச்சியில் இருந்து பஸ்களை இயக்க
வேண்டும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரவக்குறிச்சியில்
இருந்து ஆத்துமேடு, துலுக்கம்பாறை, செந்தாம்பட்டி,
இ.ஆலமரத்துப்பட்டி, குள்ளமாபட்டி வழியாக ஈசநத்தம் வரை, ஒரு மணி
நேரத்திற்கு ஒரு முறையாவது பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என,
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
-
பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு
-
காளான் சாகுபடி பயிற்சி முகாம்
-
தீர்மானம் கிழிப்பு: கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்
-
உலக பாதுகாப்பிற்காக ஒரு சிறிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்; ஈரான் போர் குறித்த டிரம்ப் பேச்சு
-
சர்வர் பிரச்னையால் 76 டாஸ்மாக் கடைகள் அடைப்பு