காளான் சாகுபடி பயிற்சி முகாம்
கரூர்:கரூர்
மாவட்டம், வேட்டமங்கலம் கிழக்கு கிராமத்தில், கரூர் வேளாண் கல்லுாரி
மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து, காளான் சாகுபடி தொழில்நுட்ப
பயிற்சி முகாமை நடத்தின.
இதில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்
ஜெகன் தலைமை வகித்தார். காளான் சாகுபடி செய்யும் முறைகள், காளானில் உள்ள
ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் விவசாயிகளுக்கான அரசு மானிய
திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.தொடர்ந்து, வேளாண்
கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு காளான்
உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் செய்முறை விளக்கங்களை நேரடி
காட்சிப்படுத்தல் மூலம் செய்து காண்பித்தனர்.
இயற்கை விவசாயி
பெரியசாமி, நவீன இயற்கை விவசாய நுட்பங்கள், நிலையான விவசாய
நடைமுறைகள் மற்றும் விவசாயத்தில் ரசாயன பயன்பாட்டை குறைப்பதன்
அவசியம் குறித்து தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். முகாமில்,
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்
கலந்துகொண்டனர்.
து.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு