பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு

கரூர்:கரூர், வையாபுரி நகர் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து மனைவி விஜயலட்சுமி, 58; இவர், நேற்று முன்தினம் இரவு வையாபுரி நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, டூவீலரில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த மர்ம நபர் ஒருவர், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, இரண்டு பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு, தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து, விஜயலட்சுமி அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement