கோவையில் வி.பி.ஜே., ஷோரூம் திறப்பு: தங்கம், வைர நகைகளுக்கு தள்ளுபடி அறிவிப்பு
கோவை: இந்தியாவின் பாரம்பரிய நகை நிறுவனங்களின் ஒன்றான, வி.பி.ஜே பிரமாண்ட ஷோரூம் 21 ஆயிரம் சதுர அடியில் கோவை 100 அடி சாலையில் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.ஷோரூமை நிர்வாகிகள் வும்மிடி சண்முகப்பிரியா, சிதாஷ் வும்மிடி, செயல் இயக்குனர் தியா வும்மிடி ஆகியோர் திறந்து வைத்தனர்.
மூன்று தளங்களைக் கொண்ட இந்த ஷோரூமில், தங்கம், வைரம், சாலிடேர், பிளாட்டினம், விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகள், ஜடாவ் நகைகள், வெள்ளி நகை மற்றும் பொருட்கள் என ஒவ்வொரு தளமும் தனித்துவமான நகை வகைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஜெமாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆப் அமெரிக்கா (ஜி.ஐ.ஏ., ) சான்றளித்த வைர நகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், ‘‘கோவையின் வர்த்தக வளர்ச்சியும், நகைகள் மீதான மக்களின் ஆர்வமும் இந்நகரை முக்கிய சந்தையாக மாற்றியுள்ளது.
தமிழ்நாட்டிலேயே எங்களது மிகப்பெரிய ஷோரூமை கோவையில் அமைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 126 ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் தரம், கைவினைத் திறன் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றுவோம்,’’ என்றார்.
மற்றொரு நிர்வாகப் பங்குதாரர் ஜிதேந்திரா வும்மிடி கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த ஷோரூம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான நகைகளை ஒரே இடத்தில் தேர்வு செய்யும் வசதியுடன், பிரத்யேக வடிவமைப்புக் குழுவின் மூலம் புதிய நகைத் தொகுப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஜி.ஐ.ஏ., சான்றளிக்கப்பட்ட வைர நகைகள் மற்றும் திருமண நகைத் தொகுப்புகள் முக்கிய அம்சங்களாக இருக்கும்,’’ என்றார்.
ஷோரூம் திறப்பு மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, தங்கம், வைரம், பிளாட்டினம், விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான சேதாரக் கட்டணம், மற்றும் மதிப்புக் கூட்டுதல் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி நகைகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும், பழைய தங்க நகைகளை மாற்றும்போது ஒரு கிராமுக்கு கூடுதலாக 125 ரூபாய் வழங்கும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை உருவாக்கிய பெருமையும் இந்நிறுவனத்துக்கு உண்டு. அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமசரிதமானசுக்கும் தனித்துவமான படைப்பை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
குற்றவாளிகளை பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் உதயநிதி: அந்துமணி பதில்கள்
-
பிரியங்காவை புறக்கணிக்கும் ராகுல்: பா.ஜ., குற்றச்சாட்டு
-
ஆந்திராவில் கரையை கடக்க துவங்கியது முரசு புயல்: வெளுத்து வாங்கும் கனமழை; தமிழகத்திலும் அலர்ட்!
-
தமிழகம் நழுவவிட்ட முதலீடு; ஆந்திரா சென்றது ரூ.1,614 கோடி: மூன்று கொரிய நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
புதுச்சேரியில் 5 மாநில உதயநாள் விழா