பிரபல ரவுடி குண்டாசில் கைது

பண்ருட்டி: கொலை முயற்சி வழக்கில் சிக்கிய பிரபல ரவுடி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

முத்தாண்டிக்குப்பம் அடுத்த கீழக்குப்பத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜசேகர்,27; பிரபல ரவுடியான இவர் மீது முத்தாண்டிக்குப்பம் மற்றும் காடாம்புலியூர் போலீஸ் ஸ்டேஷன்களில் மொத்தம் 12 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், வாலிபரை கடத்தி சென்று தாக்கிய கொலை முயற்சி வழக்கில் ராஜசேகரை, கடந்த மாதம் முத்தாண்டிக்குப்பம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., பரிந்துரையை ஏற்று, ராஜசேகரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் நேற்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை, கடலுார் சிறையில் உள்ள ராஜசேகரிடம் முத்தாண்டிக்குப்பம் போலீசார் நேற்று வழங்கினர்.

Advertisement