ஆந்திராவில் கரையை கடந்தது முரசு புயல்: வெளுத்து வாங்கும் கனமழை; தமிழகத்திலும் அலர்ட்!
அமராவதி: வங்கக் கடலில் உருவான 'முரசு' புயல், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியான ஒங்கோல் அருகே நள்ளிரவில் துவங்கி, கரையை கடந்தது. இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று 'முரசு' எனப் பெயரிடப்பட்டது. இது ஆந்திராவின் நெல்லூர் - நரசாபூர் இடையே, ஒங்கோல் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.
சூறாவளி:
வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: நள்ளிரவு முதல் முரசு புயல் கரையைத் தொடத் தொடங்கியது. கரையைக் கடக்கும் தருணத்தில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது.
மீட்புப் பணிகள் தீவிரம்:
புயல் சீற்றம் காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் சென்னை விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய 19க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றியுள்ளனர். ஒடிசாவின் தெற்கு மாவட்டங்களிலும், தெலங்கானாவிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை:
புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்தாலும், வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை முழுமையாகக் கடந்து வலுவிழக்கும் வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மழையே இல்லை..
தீபாவளி வரை லீவு விடுவாங்களான்னு சில பையன்கள் கேக்குறாங்க
நாமளா லீவு எடுத்துக்க வேண்டியது தான். அதனால் என்ன கெட்டுட போறது. எப்படியும் ஆல் பாஸ் தான். இஸ்கூலுக்கு போறா என்ன போகாங்காட்டியும் என்னமேலும்
-
டில்லி சவுத் பிளாக்கில் இருந்து இடமாறும் ராணுவம், கடற்படை அலுவலகங்கள்
-
பேட்டரி சேமிப்புக் கொள்கை 2026; தமிழக அரசு வெளியீடு
-
சிக்கிள் செல் அனீமியாவை நொடியில் கண்டறிய எளிய தொழில்நுட்பம்: ஐ.ஐ.டி மும்பை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
-
தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்கு தொழில்நுட்பத் திறன்களும் தேவை; ராஜ்நாத் சிங்
-
தீபாவளியன்று எத்தனை மணிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும்? நேரம் குறித்தது தமிழக அரசு
-
தீபாவளிக்கு பின் 5 தொகுதி இடைத்தேர்தல்; தயாராகும் தேர்தல் கமிஷன்