புதுச்சேரியில் 5 மாநில உதயநாள் விழா
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகை புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம், ஜம்மு-காஷ்மீர், லடாக் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உதய நாள் காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில், புதுச்சேரி பல்கலைக்கழகம், சமுதாய கல்லூரி, ஜிப்மர், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, அன்னை தெரேசா செவிலியர் கல்லூரி, புதுச்சேரி தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் 5 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், மை பாரத் தன்னார்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து மாநிலங்களின் கலை கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் ஆடல்-பாடல், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில், தலைமை செயலர் சரத் சவுகான், தலைமை காவல்துறை இயக்குனர் ஷாலினி சிங், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கலந்து கொண்டனர்.