பிரியங்காவை புறக்கணிக்கும் ராகுல்: பா.ஜ., குற்றச்சாட்டு

28

- சிறப்பு நிருபர் -

காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் புறக்கணிக்கிறார் என பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியிருப்பதாவது: காங்கிரஸ் பொதுச்செயலரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா, ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. ராகுலே, அவரைப் பேச விடாமல் தடுத்துள்ளார்.

கட்சியின், மாதிரி பார்லிமென்ட் நிகழ்ச்சியின் போதும், பிரியங்கா புறக்கணிக்கப்பட்டார். தவிர, ராகுலை, மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரியங்காவுக்கு, இரண்டாவது வரிசையில் நாற்காலி போடப்பட்டது. அங்கேயும், பேசுவதற்கு, அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொடர்ந்து, 100வது முறையாகத், தன்னைத்தானே, மீண்டும் நிலைநிறுத்த முயலும் ராகுல், நாட்டு மக்களைப் பற்றியோ அல்லது காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ பேசாமல், பிரியங்காவைப் புறக்கணிக்கவே முயல்கிறார். இவ்வாறு, அவர், கூறினார்.

Advertisement