இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் துறைக்கு நற்செய்தி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
புதுடில்லி: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் துறைக்கு ஒரு நற்செய்தி. இந்திய கடற்படைக்கான அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள் திட்டமானது, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட இந்திய தொழில் துறையினர் உறவை வலுப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் கப்பல் கட்டும் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிக்கும்.
இந்தக் கப்பல்களின் கட்டுமானம், அடுத்த பத்து ஆண்டுகளில் கப்பல் கட்டும் தளங்களில் 72 லட்சம் பேருக்கும், துணைத் தொழில்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 460 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள், உள்நாட்டு தொழில்நுட்பங்கள், மற்றும் இந்தியத் திறன்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், இத்திட்டம் பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக விளங்குகிறது. மேக்-இன்-இந்தியா' திட்டத்திற்கு பிரதமர் மோடி கனவை வலுப்படுத்தும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மேலும்
-
ஜெர்மனியில் முன்னணி நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு; முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா பேச்சு
-
முரசு புயல் எதிரொலி: உஷார் நிலையில் ஆந்திரா; 19 விமானங்கள் ரத்து
-
பொதுச்சொத்துகளை ஆக்கிரமித்து இயங்கும் மசூதி, சர்ச்சுகளுக்கு பட்டா வழங்குவதா? த.வெ.க., அரசுக்கு பா.ஜ., ஹிந்து முன்னணி கண்டனம்
-
ராகுல் பொதுக்கூட்டத்தால் டில்லி வியாபாரிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நஷ்டம்
-
ராமாயணம் -1 படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு : முன்பதிவில் ரூ.46 கோடி குவித்து சாதனை
-
தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தல்? அறிக்கை அளிக்க உத்தரவு