ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு; மகேஷூக்கு 3 நாள் போலீஸ் காவல்

1

சென்னை: அரசு அனுமதி பெறுவதற்காக தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திமுக நிர்வாகிகள் அரசகுமார், முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்.,26ம் தேதி கைது செய்யப்பட்ட மகேஷூக்கு 2வது முறையாக 3 நாள் போலீஸ் காவல் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், மகேஷ் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

5 நாள் காவல் வழங்கக்கோரி போலீஸார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிமன்றம் இன்று உத்தரவை வெளியிட்டுள்ளது. இன்று மதியம் ஒரு மணியில் இருந்து நவ.,4ம் மாலை 5 மணி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை காலத்தில் மகேஷூடன் அவரது வழக்கறிஞர் உடன் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் தாக்கல் செய்த ஜாமின் மனு நவ.,5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement