ரூ.634 கோடி லஞ்ச வழக்கை எதிர்த்து நேருவின் மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட் குட்டு
புதுடில்லி : திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த நேரு மீது ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. பணத்தைப் பெற்றுக் கொண்டு பணி நியமனங்களை வழங்கிய இந்த வழக்கில், நேருவின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அண்மையில் சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களும், மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்த வழக்கில் கேஎன் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து நேரு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சராக இருந்த நேரு தன் மீதான லஞ்ச புகார் வழக்கின் விசாரணையை சந்தித்தே ஆக வேண்டும் என்று கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பிரத்யேக வீடியோ!
ரூ.634 கோடி ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி; திமுக முன்னாள் அமைச்சர் நேருக்கு பெரும் அதிர்ச்சி
வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!
தமிழ்நாட்டின் மீது 10 லட்சம் கோடி கடன் உள்ளது அதில் சொத்துக்களை பறிமுதல் செய்து கடனை அடைக்க முயன்றால் குறைந்தது 10000 கோடியாவது அடைக்கலாம் , என்ன பகுத்தறிய தெரியும் தமிழர்களே ரெடியா
தமிழ்நாட்டுக்கு கொள்ளை அடிக்க வந்த பயிலுங்க அப்படியே adhae புத்தியில் 3 /4 தலைமுறையில் இன்னும் கொள்ளை அடிக்கும் palalakathai விட முடிய வில்லை. idhae காரணத்தில் தான் தம்பிக்காரன் கொலை செய்யப்பட்டான். இன்னும் அடங்களை இவனுங்க ஆட்டம் .
இவனுக சாகறவரைக்கும் இளிச்சிகிட்டு நம்பலை எகத்தாளம் செய்வானுக.
திராவிடக்கட்சிகள் ஆட்சியில் குற்றங்கள் நடந்தால் குற்றங்கள் நடந்ததாகவே காண்பிக்க மாட்டார்கள், அதை மறைத்து விடுவார்கள், இன்றைய ஆட்சியில் குற்றங்கள் நடந்தால் குற்றவாளிகளை கைது செய்கிறார்கள் இதனை நல்லவிஷயமாக பார்க்கவேண்டும்.
அதற்காக ஆறு மாத காலத்திலேயே அனைத்தும் சீராகிவிட வேண்டும் என்று நினைப்பது நடக்காத காரியம். அப்படி சரியாகிவிட வேண்டும் என்றால் திமுகவும் அதிமுகவும் 70 ஆண்டு காலங்களில் என்ன கிழித்தீர்கள், ஏன் கட்டுப்படுத்தவில்லை.
70 ஆண்டுகளில் சரி செய்ய முடியாத ஒன்றை ஆறு மாதத்தில் சரியாகிவிட வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் சாத்தியம்.
எல்லாம் உயர் நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற பின்னரே உச்ச நீதிமன்றத்தில் தண்டனை எதிர்த்து இடைக்கால தடை விதிப்பார்கள். இதுவரை 5 திமுக முன்னாள் அமைச்சர்கள் இடைக்கால தடை பெற்று உள்ளனர். தண்டனை சத்தியமாக கிடைக்காது.
இந்த ரவுடிகள் பதவியில் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி. தனி மனித ஒழுக்கத்தை கேள்விக் குறியாக்கிய இந்த திராவிஷ ரவுடிக் கட்சிகள் வேரோடு களையப்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி.
கொஞ்சமாது மானம், ஈனம், மனசாட்சி இருக்க பாத்தீங்களா.. இவரு ஊழல் செய்து கொள்ளையடிப்பாராம், ஆனா அதுக்கு கேஸ், விசாரணை இருக்கக்கூடாதாம். சுப்ரீம் கோர்ட்டுல அதுக்கு தடை கேட்பாராம்.. மக்களே, இதுதான் திமுகவின் உண்மை முகம்.. பாழாப்போன ஜென்மங்களுக்கு புரியுதா?
சட்டுபுட்டுன்னு வழக்கை முடிச்சு தண்டனையை நிறைவேற்றுங்க நீதிபதி அவர்களே. சும்மா அவரு எதிர்த்து மனு போடுவாரு அதை நீங்க திருப்பி அனுப்புவீங்க . எப்பவும் நடக்கறதுதான் நடக்குது. அவரு வெளியே ஜாலியா ரவுண்டு அடிச்சுக்கிட்டு இருக்காரு.
-கொள்ளை அடிப்பது எங்கள் பிறப்புரிமை என்று.
உச்சம் வழக்கம்போல கீழமை மன்றத்துக்குதான் குட்டு வைக்கும் ..... நேருவுக்கு ஷொட்டு கொடுக்கும் ..... ஆனா உல்டாவா இருக்குதே ?? பார்ப்போம் ....
யாராவது ஒருத்தனுக்கு முழு சொத்தையும் பறிமுதல் பண்ணுற மாதிரி தீர்ப்பு கொண்டுங்கப்பா