நாளை அதிகாலை கரையை கடக்கும் முரசு புயல்; ஒடிசா, ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

நமது நிருபர்




மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு 11.30 மணி முதல் நவம்பர் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில், ஆந்திர மாநிலம் நெல்லுார் - நரசப்பூர் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

ஒடிசா அரசு பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. ஒடிசாவின் தெற்குப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவின் பல பகுதிகளில் லேசான மழை பெய்ய துவங்கி உள்ளது. அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திராவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுவீச்சில் நடந்து வருகிறது. ஏற்கனவே அர்னாப் புயல் காரணமாக கொட்டி கனமழையில் ஆந்திராவில் 7 பேர் உயிரிழந்தனர். கடலோர மாவட்டங்கள் முழுவதும் பயிர்கள், சாலைகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்தது. தற்போது புயல் கரையை கடக்க இருக்கும் நெல்லுார் - நரசப்பூர் பகுதியில் அரசு மீட்பு படையினரை தயார் நிலையில் வைத்துள்ளது.

Advertisement